உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

பளையில் மனித எச்சங்களுடன் ரி-56 ரக துப்பாக்கிகள் மீட்பு

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் நிலக்கன்னிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களால், உக்கிய நிலையில் காணப்பட்ட 03 ரி-56 ரக துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

முகமாலை காட்டுப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்த துப்பாக்கிகளுடன் விடுதலைப் புலிகள் இயக்க சீருடையின் ஒரு பாகம் மற்றும் மனித எச்சங்கள் சிலவும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ரி-56 ரக துப்பாக்கிகள் மற்றும் விடுதலைப் புலிகள் சீருடைப் பாகத்துடனான மனித எச்சங்கள் இன்று (22) கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற அனுமதியுடன் நீதவான் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments