உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

ஊரடங்கு விதிகளை மீறிய 59,765 பேர் இதுவரை கைது

ஊரடங்கு சட்ட விதிகளை மீறியமைக்காக கடந்த இரண்டு மாதங்களில் 59,765 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி முதல் இன்றைய தினம் (19-05-2020) காலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் இந்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

இதுதவிர கடந்த இரண்டு மாதங்களில் ஊரடங்கு விதிகளை மீறியமைக்காக 16,668 வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 730 பேரை கைதுசெய்ததுடன், 252 வாகனங்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதுவரை கைதுசெய்யப்பட்டவர்களில் 16,488 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன், வழக்குகளில் 6000 பேருக்கு தண்டனைகளும் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.

No comments