உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

தேர்தலை நடத்தி மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிசெய்ய முன்னுரிமையளிக்காமல் இருப்பது ஏன் - மங்களவிடம் கோட்டா கேள்வி

புதிய தாராளவாத சமூக பொருளாதார தத்துவத்தை கொள்கையாக கொண்டவர் என்ற ரீதியில் தேர்தலை நடத்தி மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிசெய்வதற்கு முன்னுரிமையளிக்காமல் இருப்பது ஏன் என்று  முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவிடம் ஜனாதிபதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கேள்வியெழுப்பியுள்ளார்.

பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு கோரிக்கை விடுத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அனுப்பிவைத்திருந்த கடிதத்திற்கு பதிலளித்து ஜனாதிபதி இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கடந்த 28ஆம் திகதி தனக்கு அனுப்பி வைத்திருந்த கடிதத்திற்கு தனது செயலாளரின் மூலம் நேற்று (30) பதில் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

மங்கள சமரவீரவின் கடிதம் பல்வேறு பிழையான தகவல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் பதில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
உருவாகியுள்ள பிரச்சினையை அரசியலமைப்புக்கு அமைவாக தீர்ப்பதற்கும் அரச செலவுகளை அனுமதிப்பதற்காகவும் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கான கோரிக்கை' என மங்கள சமரவீரவால் ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்த கடிதத்திற்கு தலைப்பிடப்பட்டிருந்தது.

பாராளுமன்றம் கலைக்கப்படும் சந்தர்ப்பத்தில் நிதி ஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்காத பட்சத்தில் அரசியலமைப்பின் 150(3) பிரிவின் கீழ் இடைக்கால கணக்கின் மூலம் புதிய பாராளுமன்றம் கூட்டப்பட்டு 03 மாத காலத்திற்கான செலவுகளுக்குரிய அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாக ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

புதிய தாராளவாத சமூக பொருளாதார தத்துவத்தை தனது கொள்கையாக கொண்ட முன்னாள் நிதியமைச்சர் தேர்தலை நடத்தி மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிசெய்வதற்கு முன்னுரிமையளிக்காதிருப்பது ஏன் என ஜனாதிபதி கவலை தெரிவித்திருப்பதாகவும் செயலாளர் பி.பீ ஜயசுந்தர  குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் பின்வருமாறு,


No comments