உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

ஊரடங்கு தொடர்பி்ல் பிரதமரின் விசேட அறிவுறுத்தல்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தல் மற்றும் முடியுமான எல்லா இடங்களிலும் இயல்பு வாழ்க்கையை மீள ஆரம்பி்தல் ஆகிய இரண்டு விடயங்களையும் சமநிலையில் பேணுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அனைத்து தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமரினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் மாத்திரமின்றி, கொரோனா வைரஸினால் ஆயிரக்கணக்கானோர் மரணித்த இத்தாலி, பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகள்கூட இந்த சந்தர்ப்பத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீள ஆரம்பிக்கும் வேலைத்திட்டங்களை செயற்படுத்தியுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பிரிவினர், முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு வழங்கிய அதே ஒத்துழைப்பை, நாட்டை இயல்பு நிலைக்கு மாற்றும் செயற்பாட்டிலும் பொது மக்கள் வழங்குவார்கள் என எதிர்ப்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரச மற்றும் தனியார் துறைகளில் முதலில் சிறியளவான ஊழியர்களைப் பணியிடங்களுக்கு அழைத்து பஸ் மற்றும் ரயில் வண்டிகளில் பயணிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தி, பாடசாலைகள், மேலதிக வகுப்புகளை தொடர்ந்தும் மூடிவைத்து, முடியுமானளவு சமூக இடைவௌியைப் பேணி நாட்டின் இயல்பான நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் நாட்களில் செயற்படுத்தப்படவுள்ளதாக பிரதமரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனவே தொடர்ந்தும் மக்கள் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்பும் சமூக இடைவௌியைப் பேணுவதுடன், சிந்தித்து செயற்படுவது அவசியமாகும் என பிரதமர் வலியுறுதித்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் ஆபத்து கட்டுப்படுத்தப்பட்டிருப்பினும், அது முழுமையாக மறைந்து போகவில்லை என்பதை அனைவரும் நினைவில் வைத்திருக்க வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


#ARREST #CoronaVirus #COVID19 #CURFEW #Local #SocialMedia #Srilanka #MahindaRajapakse #MR #PM #LKA

No comments