உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

ஜம்மு-காஷ்மீர், பால்டிஸ்தான் பிராந்தியங்களை இந்திய வானிலை அறிக்கையில் உள்ளடக்கும் முயற்சிக்கு பாகிஸ்தான் கண்டனம்

ஆசாத் ஜம்மு - காஷ்மீர் மற்றும் கில்கிட் - பால்டிஸ்தான் ஆகிய பிராந்தியங்களை வானிலை அறிக்கையில் சேர்க்கும் இந்தியாவின் நடவடிக்கையை பாகிஸ்தான் கண்டித்துள்ளது.

இதுதொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பாகிஸ்தான் வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஆயிஷா பாரூகி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், குறிப்பிட்ட இரண்டு பிராந்தியங்களையும், தனது தொலைக்காட்சி வானிலை அறிக்கையில் சேர்ப்பதற்கான இந்திய நடவடிக்கையை பாகிஸ்தான் முற்றாக நிராகரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வருடத்தில் இந்தியா வௌியிட்ட அரசியல் வரைபடங்கள் திட்டத்தை போன்றே, இந்த நடவடிக்கையும் சட்டபூர்வமற்ற, உண்மைக்குப் புறம்பான மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவை தீர்மானங்களை மீறும் செயல் என ஆயிஷா பாரூகி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பொறுப்பற்ற நடவடிக்கைகளுக்கு இதுவொரு சிறந்த உதாரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவின் இத்தகைய சட்டவிரோத மற்றும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளால் ஜம்மு-காஷ்மீரின் சர்ச்சைக்குரிய நிலையை மாற்ற முடியாது என்றும் பாகிஸ்தான் வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இத்தகைய நகர்வுகளால் இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர் மக்களின் மறுக்க முடியாத சுயநிர்ணய உரிமைக்குப் பாரபட்சம் காட்டமுடியாது என்றும் அவர் ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.

இதேவேளை, சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பிரதேசங்களை உள்ளடக்கிய பிராந்தியங்கள் மீதான ஆதாரமற்ற கூற்றுகளின் மூலம் உலக நாடுகளை போலியான தகவல்களால் தவறாக வழிநடத்துவதைத் தவிர்க்குமாறும் இந்தியாவை பாகிஸ்தான் வலியுறுத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments