உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொழும்பில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் விநியோகம்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 பரவுதல் காரணமாக நிர்க்கதிக்குள்ளாகியுள்ள சுயாதீன ஊடகவியலாளர்களுக்கு இலங்கை சுயாதீன ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தினால் இன்றும் (12) உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன.

கொரோனா காலத்தில் குறிப்பாக சுயாதீன ஊடகவியலாளர்களின் நிலை பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது.

பலருக்கு முன்னரைப் போன்று வெளியில் செய்தி சேகரிக்க செல்ல முடியவில்லை என்பதுடன் இன்னும் பலர் தொழிலை இழந்து வாழ்வாதார ரீதியில் பாரிய இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் Tamil arts and media school நிறுவனத்தின் பணிப்பாளர் தினேஷ் கார்மேகம் ஒருதொகை உலருணவு பொதிகளை  இன்று (12)
இலங்கை சுயாதீன ஊடகவியலாளர்கள் ஒன்றியத்திடம் வழங்கினார்.

இந்த உலருணவுப் பொதிகள் கொழும்பில் வாழும் ஊடகவியலாளர்களுக்கு இன்றைய தினமே பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.No comments