உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

இலங்கை மீது தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை - கமல் குணரத்ன

இலங்கை மீது தீவிரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வௌியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து மக்களை தவறாக திசைதிருப்பும் வகையில் சமூக ஊடகங்களில் பரவிவரும் தகவல்களுக்கு ஏமாற்றமடைய வேண்டாம் எனவும் பொது மக்களிடம் பாதுகாப்பு அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சமூக ஊடகங்களில் பரவிவரும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்பதுடன், இலங்கைக்குள் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வுப் பிரிவுகளுக்கு எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக இராணுவம் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும், நாட்டின் பாதுகாப்பினை எந்த வகையிலும் புறக்கணித்துச் செயற்படவில்லை என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் அரசாங்கத்தின் கீழ், நாட்டிலுள்ள சகல புலனாய்வுப் பிரிவுகளும் ஒரு வரையமைப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், உள்ளக மற்றும் புற பாதுகாப்பிற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை ஆராய்வதற்காக புலனாய்வுப் பிரிவுகளை வலுவூட்டியிருப்பதாகவும் பாதுகாப்பு செயலாளர் கூறியுள்ளார்.No comments