உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு நீடிப்பு

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் மறுஅறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை (11) ஊரடங்கு சட்டம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தளர்த்தப்படுகின்றது.

இதன் பிரகாரம் களுத்துறை, புத்தளம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் நாளை திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த மாவட்டங்களில் மறுஅவிறித்தல் வரையில் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோதிலும், இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவன செயற்பாடுகளை வழமை நிலைக்கு கொண்டுவருதல் ஏற்கனவே திட்டமிட்டவாறு நாளை (11) முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே முன்னர் வௌியிடப்பட்ட அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ள இயல்பு நிலைக்குத் திரும்புதல் தொடர்பான நிபந்தனைகளில் மாற்றங்கள் இல்லையென ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.


No comments