உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொரோனா அபாய சூழ்நிலை முற்றாக தணி்யவில்லை - வைத்திய அதிகாரிகள் சங்கம்

இலங்கையில் இதுவரை இரண்டு கொரோனா சமூகப் பரவல் சூழ்நிலைகள் மாத்திரமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

வெலிசர கடற்படை முகாம் மற்றும் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள் ஆகிய இரண்டு சமூகப் பரவல் காரணிகளே அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் இலங்கையில் பின்பற்றப்பட்டு வருகின்ற நடைமுறைகளினால் இன்று வரையில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் திருப்திகரமானவையாக அமைந்துள்ளன.

எவ்வாறாயினும், நாட்டில் கொரோனா அபாய சூழ்நிலை முற்றாக தணி்ந்துவிடவில்லை என்றும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், மனித நடமாட்டத்திற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள சூழ்நிலையில், வைரஸின் பாரதூரம் குறித்து கவனம் செலுத்துவதுடன், சுகாதார வழிகாட்டல் முறைமைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டியது பொது மக்களின் பாரிய கடமையாகும் என்றும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பிக் கொண்டிருக்கும் ஒரு சந்தர்ப்பத்தில், கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக பின்வரும் வழிகாட்டல் முறைகள் குறித்து பொது மக்கள் கவனம் செலுத்துவது அவசியமாகும் என்றும் அந்த சங்கத்தினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

  1. நாட்டிற்குள் நபர்கள் பிரவேசிக்கும் இடங்களை முறையாக நிர்வகித்தல்.
  2. நாட்டினுள் நிலவும் உள்ளக ஒன்றுகூடல்களை முறையாக நிர்வகித்தல்.
  3. சமூக சூழ்நிலைகளை அடிக்கடி பரிசோதனைக்கு உட்படுத்துதல்.
  4. அடிப்படை சுகாதார பாதுகாப்பு கொள்கைகளுக்கு அமைவாக, புதிய வழமையான வாழ்க்கை முறைக்குள் உள்வாங்கப்படுதல்.( சமூக இடைவௌி / சுவாச விதிமுறைகள் / கிருமி நீக்கத் தொழில்நுட்பம் / முகக் கவசம் அணிதல்)

இந்த விதிமுறைகள் தொடர்பாக மேலதிக தகவல்களுக்கு அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசித்து அறிந்துகொள்ள முடியும்.





No comments