உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு - விசாரணை ஆரம்பம்

கொழும்பு, மாளிகாவத்தை பகுதியிலுள்ள மாடிக் குடியிருப்பு தொகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் மாளிகாவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

மாளிகாவத்தை லக்செத செவன மாடிக் குடியிருப்புத் தொகுதியில் இன்று (30-05-2020)  மாலை 5 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட குடியிருப்புத் தொகுதியில் வாழ்ந்துவரும் 35 வயதான ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தினால் காயமடைந்துள்ளார்.

இந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments