உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

முல்லதை்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் குணசிங்கபுரவைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு

கொழும்பு, குணசிங்கபுர பகுதியில் இருந்து தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த இரண்டு பேர் (01) நேற்று  உயிரிழந்துள்ளனர்.

இந்த தகவலை விமானப்படை ஊடகப் பேச்சாளரான குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க உறுதிப்படுத்தினார்.

குணசிங்கபுர பகுதியில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள் ஏப்ரல் 14 மற்றும் 18 ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட நாளொன்றில் விமானப்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் முல்லைத்தீவு பகுதியிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த மக்களில் ஒருவர் நேற்று காலை உயிரிழந்துள்ளதுடன், மற்றையவர் மாலை வேளையில் உயிரிழந்துள்ளார்.

இவர்கள் தொடர்பில் சரியான அடையாளங்கள் இல்லையெனவும் விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

உயிரிழந்த இருவரினதும் உடல்கள் முள்ளியாவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், 80 வயதுக்கு மேற்பட்ட ஒருவரே இன்று (01) காலை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இருவரினதும் மாதிரிகள் PCR பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

பரிசோதனை முடிவுகளின் பின்னரே இருவரினதும் மரணத்திற்கான காரணத்தைக் கூறமுடியும் என்றும் விமானப்படை ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

No comments