உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - கல்பிட்டியில் கைதான நபர் மீதான விசாரணைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கல்பிட்டிய பகுதியில் நேற்று கைதுசெய்யப்பட்ட நபரின் அலுவலகத்தில் இருந்து பெருந்தொகையான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பிட்ட சந்தேகநபரினால் நடத்திச் செல்லப்பட்ட அரச சார்பற்ற நிறுவனத்திற்கு முதலீடு செய்துள்ள பல பற்றுச்சீட்டுகள் ஆவணங்களில் அடங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

புத்தளம், கல்பிட்டிய பகுதியில் இயங்கிய இந்த அரச சார்பற்ற நிறுவனம் சீல் வைக்கப்பட்டு அந்த அலுவலம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நேற்று கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைத்து தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த விசாரணைகளை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தொடர்பான விசாரணைகளை விரைவாக நிறைவுசெய்து, அந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மிக விரைவில் தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்ப்பார்க்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

No comments