உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொரோனாவுக்கு பின்னரான தேர்தல் செலவுகள் இரட்டிப்பாக அதிகரிக்கும் - மஹிந்த கூறியதாக திலகர் தெரிவிப்பு

கொரொனாவுக்கு பின்னரான தேர்தல் செலவுகள் இரு மடங்காக அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் தெரிவித்துள்ளார்.

கொரொனா அச்சத் தணிந்த பின்னர் தேர்தல் ஆறுமாதம் கடந்து நடைபெற்றாலும் இப்போது திட்டமிட்டுள்ள தேர்தல் செலவுகள் இருமடங்காக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என தேரதல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்தாக எம். திலகராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று நடைபெற்ற கட்சி செயலாளர்களுடனான சந்திப்பின்போதே தேர்தல்கள் ஆணையாளர் இதனைக் கூறியுள்ளார்.

நாட்டில் மக்கள் வருமானம் இழந்து நிவாரணம் பெற்று வாழும் சூழலில் தேர்தல் ஒன்று நடாத்தப்படுமானால் அது நாட்டுக்கு பெரும் செலவை உருவாக்கும் என மஹிந்த தேசப்ரிய தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் ஏற்கனவே திட்டமிட்டதை விட தேர்தல் செலவுகள் அதிகரிக்கும் சாத்தியமுள்ளதா என தான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், செலவுகள் இரண்டு மடங்காகும் வாய்ப்புள்ளதாக கூறினார் என்றும் எம். திலகராஜ் தெரிவித்தார்.

கொரொனா சூழலில் முகக் கவசம், தொற்றுநீக்கி, உள்ளிட்ட அனைத்து புதிய நடைமுறைகளுக்காகவும், இந்த செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளன.

அதுபற்றி சரியான கணிப்பீடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு கூடி ஆராய்ந்த பின்னர் உறுதியாக வௌியிடப்படும் என மஹிந்த தேசப்ரிய தெரிவித்ததாக திலகராஜ் மேலும் சுட்டிக்காட்டினார்.

No comments