சுகாதார அமைச்சு வழிகாட்டலுக்கு அமையவே பாடசாலை கல்வி நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் - டலஸ் தெரிவிப்பு
ள் மேற்கொள்ளப்படும் என கல்வியமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.
கல்வியமைச்சின் செயலாளரினால், மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கல்வித்துறையுடன் சம்பந்தப்பட்ட ஏனைய அனைத்து தரப்பினரையும் தௌிவுபடுத்தியதன் பின்னரே பாடசாலைகள் ஆரம்பிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, எதிர்வரும் 13 ஆம் திகதி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை கல்வியமைச்சு வரவழைத்து கலந்தாலோசிக்கவுள்ளதாக ஒரு செய்தி ஊடகங்களில் வௌியாகியிருந்ததாக குறிப்பிட்ட அமைச்சர், அத்தகைய எந்தவொரு நடவடிக்கைளும முன்னெடுக்கப்படவில்லை என்று கூறினார்.
எனவே, பிள்ளைகளின் கல்வி தொடர்பான விடயங்களில் ஊடகங்கள் மிகுந்த கரிசணையுடன் செய்திகளை வௌியிட வேண்டும் எனவும் கல்வியமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
No comments