உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

ஜனாதிபதியின் மூன்று மாத சம்பளம் கொவிட் சுகாதார சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பு

கொவிட்-19 சுகாதார சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு தனது மூன்று மாதகால சம்பளத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அன்பளிப்பு செய்துள்ளார்.

தனது மூன்று மாத சம்பள தொகையான 292,500.00 ரூபாவை, கொவிட்-19 சுகாதார சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு ஜனாதிபதி இன்று (14) அன்பளிப்பு செய்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இதற்கான காசோலையை இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவிடம் ஜனாதிபதி கையளித்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

#BREAKING #CoronaVirus #COVID19 #ARREST #CURFEW #Local #SocialMedia #Srilanka

No comments