உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

மின்சார கட்டணத்திற்கு புதிய சலுகை

மாதாந்த மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கான நியாயமான சலுகை காலத்தை மின் பாவனையாளர்களுக்கு வழங்குவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை தனியார் மின்சார நிறுவனம் ஆகியன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

இதுதொடர்பான அளவுகோள்களின் அடிப்படையில் மின்சார கட்டணப் பட்டியல்களை வழங்குவதில் தாமதம் நிலவியபோதிலும், சலுகை விகிதத்தில் கட்டணங்களை அறவிடுவது குறித்து இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை தனியார் மின்சார நிறுவனம் ஆகியன கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த காலப்பகுதியில் மின்சார கட்டண பட்டியல்களை விநியோகிக்காத பட்சத்திலும், தடையற்ற மின்சார விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இருந்தபோதிலும், தொடர்ச்சியாக தரமான மின்சார விநியோகத்தை இந்த நிறுவனங்கள் முன்னெடுப்பதற்கான நிதி நிலையை மீட்பதற்காக வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பல மாதங்களாக நிலுவையிலுள்ள மின்சார கட்டணங்களை செலுத்துவதன் மூலம் உதவிபுரிய முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேநேரம், ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த காலப்பகுதியில் மின்சார பாவனையாளர்கள் அதிகபட்ச சலுகையை உறுதி செய்வதற்காக தங்களின் மின்சார கட்டண பட்டியலைத் தயாரிப்பது, கணக்கிடுவது தொடர்பாக பின்வரும் பரிந்துரைகள் செயற்படுத்தப்படுகின்றன.




இதேவேளை, ஒரு மாதத்திற்கு 60 அலகுகள் என்ற சாதாரண பாவனையைக் கொண்ட பாவனையாளர்களுக்கு ஒரே தடவையில் இரண்டு பட்டியல்களை வழங்கும்போது கீழ் காணப்படும் முறையில் கட்டணம் நிர்ணயிக்கப்படவுள்ளது.



No comments