உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும், கிழக்கு ஆளுநருக்கும் இடையில் முக்கிய சந்திப்பு

பாகிஸ்தானின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் முகம்மது சாத் கட்டாக் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆகியோரிடையே முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இலங்கை - பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய சில விடயங்கள் குறித்து இரண்டு பிரதிநிதிகளும் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.

திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுநரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நேற்று முன்தினம் 28 ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, கிழக்கு மாகாணத்திற்கென பாகிஸ்தானால் வழங்க முடியுமான உதவிகள் உட்பட , இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவின் அனைத்து துறைகள் சம்பந்தமாகவும் உயர்ஸ்தானிகர்  விரிவாக கலந்துரையாடினார்.

மேலும் , இலங்கையின் கிழக்கு மாகாணத்துடன் பொருளாதார, கல்வி, கலாச்சார, சுற்றுலா மற்றும் மக்கள் தொடர்புகளை மேம்படுத்துதல் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது .

உயர் ஸ்தானிகர் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் கிழக்கு மாகாணத்திற்கான அவரது முதல் விஜயத்தை வரவேற்ற ஆளுநர் யஹம்பத், கிழக்கு மாகாணம் மற்றும் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் அந்த நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

No comments