உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

அலுத்கம தாக்குதல் - 03 பொலிஸார் பணி இடைநிறுத்தம்

அலுத்கம பொலிஸ் பிரிவின் அம்பகஹ சந்தி எரிபொருள் நிரப்பு நிலையத்தை அண்மித்துள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் கடந்த 25 ஆம் திகதி மாலை 4.45 அளவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மூன்று பொலிஸ் உத்தியோகமத்தர்கள் கடமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் பிரகாரம் கடமையை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளதை அடுத்து, களுத்துறை மாவட்ட முதலாாம் இலக்க பொலிஸ் அத்தியட்சகரினால் இந்த மூன்று உத்தியோகத்தர்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும், கான்ஸ்டபிள் ஒருவரும் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இடைநிறுத்தப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் மற்றும் சார்ஜன்ட் ஆகிய இருவரும் களுத்துறை பொலிஸ் கல்லூரியில் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன், விசேட கடமையின் நிமித்தம் அலுத்கம பொலிஸ் நிலையத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மற்றைய பொலிஸ் கான்ஸ்டபிள் அலுத்கம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அலுத்கம, அம்பகஹ சந்தி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகேயுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில், கடந்த 25 ஆம் திகதி ஓட்டிசம் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டிருந்த 14 வயது சிறுவனான தாரிக் அஹமட் பொலிஸரால் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு தரப்பினரும் நீதியாக விசாரணையை முன்னெடுக்குமாறு அழுத்தங்களை கொடுத்து வருகின்றனர்.

No comments