உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

ஜூன் 19 முதல் சென்னையில் பொது முடக்கம் - கொரோனா அச்சம் தீவிரம்

சென்னையில் ஜூன் 19 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளதாக இந்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன.

சென்னை மற்றும் அதனை அண்மித்துள்ள மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவலைக் கருத்திற்கொண்டு மருத்துவ நிபுணர்கள், பொது சுகாதார வல்லுநர்கள் குழுவினருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் அடிப்படையிலும், அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுக்கு அமைவாகவும் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் பிரகாரம் எதிர்வரும் 19 ஆம் திகதி அதிகாலை 00 மணிமுதல் 30 ஆம் திகதி (30-06-2020) நள்ளிரவு 12 மணி வரையில் 12 நாட்களுக்கு பொது முடக்கம் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments