உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

71 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ருவன்வௌி மகாசாயவில் ஜனாதிபதி பூஜை வழிபாடு (Photos)

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஸவின் பிறந்த நாளை முன்னிட்டு அநுராதபுர ருவன்வெளி மகாசாயவில் இன்று (20-06-2020) காலை நடைபெற்ற ஆஹார பூஜை இடம்பெற்றது.

தனது 71 ஆவது பிறந்த தினத்தை மதவழிபாடுகளுக்கு முன்னுரிமையளித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று வரவேற்றுக் கொண்டாடினார்.

இதன்போது பிரதமர் மஹிந்த ராஜக்ஸ உட்பட ராஜபக்ஸ குடும்பத்தினர், அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டு ஜனாதிபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

வரலாற்று சிறப்புமிகு ருவன்வௌி மகாசாய விஹாரையில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளின் போது பதிவாகிய நிழற்படங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

No comments