உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

உமா ஓயா பணிகளை நிறைவுசெய்ய ஈரானில் இருந்து 85 தொழில்நுட்பவியலாளர்கள் வருகை

உமா ஓயா பணிகளை நிறைவுசெய்வதற்காக ஈரானிலிருந்து 85 தொழில்நுட்பவியலாளர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இந்த குழுவினர் நேற்று பிற்பகல் (15) நாட்டை வந்தடைந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உமா ஓயா திட்டத்தின் சுமார் 95 வீதமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எஞ்சியுள்ள பணிகளை இந்த வருட இறுதிக்குள் நிறைவுசெய்வதற்கு எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

உமா ஓயா திட்டத்தின் மூலம் 120 மெகாவோட் நீர் மின்சாரம் தேசிய மின்சாரக் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளது.

ஈரானில் இருந்து வருகை தந்தவர்கள் அனைவரும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் இராணுவத்தினால் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைக்காலப்பகுதி நிறைவுபெற்ற பின்னர் மீண்டும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதன் பின்னர் உமா ஓயா திட்டப் பணிகளில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Add caption

No comments