உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

இலங்கையின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஜேர்மன் நிதியுதவி

தொழில்நுட்ப உதவி நிவாரணமாக ஜெர்மனியிடமிருந்து இலங்கைக்கு 11 மில்லியன் யூரோ நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்ச்சித் திட்டங்களுக்குரிய உடன்படிக்கைகள் இன்று (10-06-2020) நிதியமைச்சில் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

  1. இளைய தலைமுறையினருக்கான கேள்வியின் அடிப்படையில் தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்காக 7 மில்லியன் யூரோக்களும், 
  2. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு சர்வதேச சந்தையில் போட்டித் தன்மையை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களுக்காக 3.5 மில்லியன் யூரோக்களும், 
  3. புதிய திட்டங்களைத் தயாரிக்கும்போது, தேவையான ஆய்வுகளை முன்னெடுப்பதற்கும், சிறியளவிலான திட்டங்களுக்கு கடனுதவி அளிப்பதற்கும், ஜேர்மன் நாட்டு நிபுணத்துவ சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் 0.5 மில்லியன் யூரோக்களும் இந்த நிதியுதவியின் கீழ் வழங்கப்படவுள்ளன.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களுக்கான நிதியுதவிகள் யாவும் ஜேர்மன் அரசாங்கத்தின் கீழ் GIZ நிறுவனம் ஊடாக முன்னெடுக்கப்படும் என்றும் நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments