உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

வலவே ஆற்றில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு

கல்தொட்ட, வெலிபதயாய பிரதேசத்தில் வலவே ஆற்றில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தவர்களில் இரண்டு இளைஞர்கள் இன்று (14-06-2020) நீரில் முழ்கியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

22 வயதான ஒபநாயக்க பகுதியைச் சேர்ந்த இளைஞனும், 20 வயதான கொத்மலை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனும் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனர்.

மில்லேவ பகுதியிலுள்ள தனியார் நிறுவனமொன்றின் ஊழியர்களான இவர்கள், நிறுவனத்தில் பணிபுரியும் யுவதி ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தபோதே குறிப்பிட்ட பகுதியில் நீரில் மூழ்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இளைஞர்களின் சடலங்கள் பலாங்கொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கல்தொட்ட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments