கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்யும் ஜனாதிபதி செயலணி நியமனம்
கிழக்கு மாகாணத்தினுள் தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான 11 பேர் அடங்கிய ஜனாதிபதி செயலணியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நியமித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று (02) வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் செயலணி அங்கத்தவர்கள் பெயரிடப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதியினால் அந்த செயலணிக்கான அதிகாரங்களும் உரித்தளிக்கப்பட்டுள்ளன.
இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரைக்கு அமைவாக ஜனாதிபதியின் அதிகாரங்களின் கீழ் இந்த செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலணியின் தலைவராக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஓய்வுபெற்ற கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஜீவந்தி சேனாநாயக்க செயலணியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குழுவின் அங்கத்தவர்கள் விபரம் மற்றும் அதிவிசேட வர்த்தமானி பின்வருமாரு -
இதேவேளை, இந்த ஜனாதிபதி செயலணிக்கு பின்வரும் பணிகளை முன்னெடுப்பதற்கான அதிகாரங்களும் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளன.
- கிழக்கு மாகாணத்தினுள் அமைந்துள்ள தொல்பொருள் பெறுமதிவாய்ந்த இடங்களை அடையாளம் காணுதல்
- அடையாளம் காணப்பட்ட இடங்கள் மற்றும் தொல்பொருள் பாதுகாப்பு மற்றும் மீள் நிர்மாணித்தல், தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்குப் பொருத்தமான நடைமுறையொன்றை இனங்காணுதல் மற்றும் செயற்படுத்துதல்.
- தொல்பொருள் இடங்களுக்கு ஒதுக்கப்பட்ட காணியின் அளவை அடையாளம் காணுதல், குறித்துரைக்கப்பட்ட மற்றும் சட்ட ரீதியாக அவ்விடங்களை ஒதுக்குவதற்குத் தேவையான செயற்பாடுகளை மேற்கொள்ளல்.
- தொல்பொருள் ரீதியான பெறுமதி வாய்ந்த இடங்களின் கலாசாரப் பெறுமதிகளைப் பாதுகாத்து இலங்கையின் தனித்துவத்தை தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பிரசாரம் செய்தலும் சொல்லப்பட்ட மரபுரிமைகளை மேம்படுத்துவதற்காக சிபாரிசுகளை சமத்தலும்
என்ற நான்று வகையான பணிகளை நிறைவேற்றுவதற்கான அதிகாரங்களை அதிவிசேட வர்த்தமானி ஊடாக இந்த ஜனாதிபதி செயலணிக்கு ஜனாதிபதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments