அப்ரிடிக்கும் கொரோனா தொற்று உறுதி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஷாஹிட் அப்ரிடி கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் வலைதளத்தில் அப்ரிடி இன்று (13-06-2020) பதிவிட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை முதல் தனது உடலில் கடும் வலி ஏற்பட்டுள்ளதாகவும், துரதிர்ஷ்டவசமாக மருத்துவ பரிசோதனையில் தனக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விரைவில் தாம் குணமடைவதற்காக பிரார்த்தனை செய்யுமாறும் ஷாஹிட் அப்ரிடி தனது டுவிட்டர் தளத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments