உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

சொய்சாபுர ஹோட்டல் தாக்குதல் - மேலுமொரு சந்தேகநபருக்கு விளக்கமறியல்

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிலுள்ள சொய்சாபுர பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் து்ப்பாக்கிப் பிரயோகம் நடத்தியமை ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு 28-06-2020 ஆம் திகதி கல்கிஸ்ஸ நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

ஹோட்டல் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்துவதற்கு மூல காரணமானவர் என்ற சந்தேகத்தின் பேரில் 36 வயதுடைய ஒருவர் நேற்று ரத்மலானை பகுதியில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த நபரை கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தியதை அடுத்து எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments