உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுக்களுக்கு எதிரான மனு நிராகரிப்பு

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) வேட்புமனுக்களை நிராகரிக்குமாறு கோரி ஐக்கிய தேசிய கட்சியினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் மற்றும் அதன் செயலாளர் ஆகியோரின் பெயர்களை ஆட்சேபித்து ஐக்கிய தேசிய கட்சியினால் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஐக்கிய தேசிய கட்சி சின்னத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள ஓஷத ஹேரத், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுவை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுக்களை நிராகரிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கடந்த மே 22 ஆம் திகதி மனுதாரர் உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்றம் அதனை இன்று நிராகரித்துள்ளது.

No comments