உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

அமெரிக்காவில் மற்றுமொரு கறுப்பின இளைஞன் பொலிஸாரால் சுட்டுக் கொலை

நன்றி பீபீசி
அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் கைது நடவடிக்கையொன்றின் போது மற்றுமொரு கறுப்பின இளைஞன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரேஷாட் புரூக்ஸ் என்ற 27 வயதுடைய ஆபிரிக்க - அமெரிக்க கறுப்பின இளைஞனே அட்லாண்டா பொலிஸாரால் வௌ்ளிக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தை அடுத்து அட்லாண்டா பொலிஸ் தலைமை அதிகாரி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஏற்கனவே மினியாபொலிஸ் பிரதேசத்தில் ஜோர்ஜ் புளொய்ட் என்ற கறுப்பினத்தவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இனவெறிக்கு எதிராக அமெரிக்காவில் பல நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும்  ஆர்ப்பாட்டங்கள் இந்த சம்பவத்தினால் மேலும் உக்கிரமடைந்துள்ளன.

நன்றி பீபீசி
உணவகம் ஒன்றிற்கு இடையூறாக காரை நிறுத்தியிருப்பதாக உணவக உரிமையாளரால் அறிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு சென்ற பொலிஸார். காரில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞனை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்தி குறித்த கறுப்பின இளைஞன் மது அருந்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரைக் கைதுசெய்ய முற்பட்டபோது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கியைப் பிடுங்கிய இளைஞன் அவர்களைத் தாக்கியதுடன், அவர்கள் மீது சூடு நடத்த முற்பட்டுள்ளான்.

இதன்போது பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலில் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கறுப்பின இளைஞன் ரேஷாட் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கறுப்பின இளைஞன் மீது சூடு நடத்தப்படும் காணொளி லிங்க்,


No comments