உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

இயல்புநிலைக்கு திரும்புவதற்கான சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்தும் பின்பற்றுமாறு அறிவுறுத்தல்

கொவிட்-19 சூழ்நிலைகள் உலகளாவிய ரீதியில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, தொற்று நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்படும் வரையில் குறிப்பிட்ட சில முன்னாயத்த நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியமாகும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

எவ்வாறாயினும், புதிய இயல்புநிலைக்கு திரும்புதல் தொடர்பான வழிக்காட்டல் முறைகளை தொடர்ச்சியாக தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் பின்பற்றுவது மிக அவசியமாகும் என்றும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் இடம்பெற்ற கொவிட்-19 பரவல் தொடர்பான மூலோபாய கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இங்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் பிரகாரம் சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் அலுவலகம், அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம், உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்புகள் இணைந்து செயலாற்ற வேண்டும் என ஜனாதிபதி கேட்டுக் கொண்டதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவினால் இயல்பு நிலைக்கு மாறுவதற்கான முழுமையான சுகாதார வழிகாட்டல் ஆலோசனைகள் வௌியிடப்பட்டுள்ளதாகவும், அதில் ஏதேனும் மாற்றம் மேற்கொள்வதாயின் அதனுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னரே மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


No comments