உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

BREAKING; ஜூலை 6 முதல் பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் மீள ஆரம்பம்

ஜூலை 6 ஆம் திகதி அனைத்து அரசாங்க பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம் 4 கட்டங்களாக பாடசாலைகளை ஆரம்பிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஜூன் 29 ஆம் திகதியும், தரம்5, 11 மற்றும் 13 மாணவர்கள் ஜூலை 6 ஆம் திகதியும், தரம் 10 மற்றும் 12 மாணவர்கள் ஜூலை 20 ஆம் திகதியும், தரம் 3,4,6,7,8,9 ஜூலை 27  ஆம் திகதியும் பாடசாலைகளுக்கு சமூமகளிக்க வேண்டும்.

இதேவேளை, தரம் 1 மற்றும் 2 வகுப்புகளை ஆரம்பிப்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சர் மேலும் தௌிவுபடுத்தியுள்ளார்

No comments