உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் மத்திய மாகாண ஆளுநர் இடையில் முக்கிய சந்திப்பு (Photos)

இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மொஹமட் சாத் கத்தாக், மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ. கமகேவை சந்தித்து கவந்துரையாடினார்.

இந்த சந்திப்பு கண்டியிலுள்ள ஆளுநரின் அலுவலகத்தில் நேற்று (29) இடம்பெற்றது.

மத்திய மாகாண ஆளுநருக்கும், இலங்கைக்கான பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான இருதரப்பு சுமுக கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது இரண்டு நாடுகளினதும் நட்புறவை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், இரண்டு முக்கியஸ்தர்களும் நினைவுச் சின்னங்கும் பரிமாற்றிக் கொள்ளப்பட்டன.

பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகருக்கும், மத்திய மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பின்போது ம்த்திய மாகாண பிரதம செயலாளர் காமினி ராஜரத்ன, ஆளுநர் செயலாளர் எம்.ஜீ.ஏ. திலகரத்ன ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.






#Local #SriLanka #Pakistan #Lka #Covid-19

No comments