December 8, 2022

கொவிட் 19 வைரஸ் தொற்று அபாயம் காரணமாக கண்டி மாவட்டத்தில் சுமார் 400 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து விடுமுறையில் சென்ற அதிகாரிகளில் 7 பேர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்ததை அடுத்து அவர்களுடன் நேரடி தொடர்பு பேணியவர்கள் என சந்தேகிக்கப்படும் 400 பேர் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்தார்.
இதேவேளை, குண்டசாலை பகுதியில் கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் பணிபுரியும் அதிகாரியின் மனைவி மற்றும் தந்தை ஆகியோருக்கும் கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் 50 பேருக்கு கொவிட்-19 தொற்று தொடர்பான பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவற்றின் முடிவுகள் இன்றிரவு (15-07-2020) தனக்குக் கிடைக்கும் என்றும் கண்டி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அர்ஜுன திலகரத்ன கூறினார்.
சுகாதார ஆலோசனைகளை முறைப்படி பின்பற்றி இந்த வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாததுக் கொள்வதற்கு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Update: 
8.20 PM
இதேவேளை, கண்டி மாவட்டத்தில் கடைசியாக இன்றிரவு (15-07-2020) பெறப்பட்ட 50 பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் படி இரண்டரை வயது குழந்தையொன்று கொவிட்-19 தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக கண்டி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அர்ஜுன திலகரத்ன Kandy Tamil News க்கு உறுதிப்படுத்தினார்.
ஏனையோர் கொவிட் தொற்றுக்கு இலக்காகியிருக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
அத்துடன் தொற்றுக்கு இலக்காகியுள்ள குழந்தையை கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு அனுப்பி உரிய சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *