src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> காஷ்மீர் தியாகிகள் தினம் இன்று அனுஷ்டிப்பு - பாகிஸ்தான் பிரதமர் நினைவுகூரல் - KandyTamilNews

KANDY TAMIL NEWS

KANDY TAMIL NEWS
உண்மைக்கு முதலிடம்...

Breaking News

காஷ்மீர் தியாகிகள் தினம் இன்று அனுஷ்டிப்பு - பாகிஸ்தான் பிரதமர் நினைவுகூரல்

காஷ்மீர் பிராந்தியத்தில் இன்றைய தினம் (13/07/2020) தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

1931 ஆம் ஆண்டின் ஜூலை மாதம் 13 ஆம் திகதி டோக்ரா மகாராஜாவின் படைகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகங்களில் ஏராளமான காஷ்மீர் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக வரலாற்றுப் பதிவுகள் குறிப்பிடுகின்றன.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாகவே காஷ்மீரில் இன்று (13/07/2020)
 தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

கொடுங்கோல் ஆட்சியால் அடிபணிய செய்யப்பட்ட மக்கள் மீது அடக்குமுறை, துன்புறுத்தல் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை மறுத்தல் மற்றும் அந்த மக்கள் மீதான அநீதிகளுக்கு எதிராகவும் ஒடுக்குமுறையைப் பயன்படுத்தி ஒரு சமூகத்தின் நாகரிக உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் செய்தித் தளங்கள் சுட்டிக்காட்டியுளளன.

1846 முதல் 1947 வரையான காலப்பகுதியில் பெரும்பான்மையான முஸ்லிம் மக்களைக் கொண்ட காஷ்மீர் பிராந்தியம் டோக்ரா ராஜபுத்திர வம்சத்தினரால் ஆளப்பட்டு வந்தது. இந்த ராஜபுத்திர வம்சத்தினர் காஷ்மீர் மக்களை மிகவும் மோசமாக நடத்தியதுடன், அவர்களின் மனித உரிமை மற்றும் மத விவகாரங்களிலு்ம தலையிட்டதாக பாகிஸ்தான் தரப்பில் தொடர்ந்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக பரவலாக கிளர்ச்சியைத் தூண்டும் வகையில் உரை நிகழ்த்தியதாக பயங்கரவாத குற்றச்சாட்டில் காஷ்மீர் இளைஞரான அப்து்ல் காதீர் கைது செய்யப்பட்டதன் பின்னணியிலேயே இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளன.


இதனையடுத்து காஷ்மீரில் தொடர்ந்தும் அமைதியின்மை கிளர்ச்சிகள், எல்லை மோதல்கள் இடம்பெற்று வருகின்ற பின்னணியில் வருடந்தோரும் காஷ்மீர் தியாகிகள் தினமும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, காஷ்மீர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது உ்ததியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

ஜம்மு - காஷ்மீரில் சட்டவிரோத மற்றும் காட்டுமிராண்டித் தனமான இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான காஷ்மீரிகளில் தொடர்ச்சியான போராட்டத்திற்கு தாம் தலைவணங்குவவதாகவும், 1931 ஜூலை 13 ஆம் திகதி சம்பவத்தின் சுஹதாக்களை இன்றைய தினம் நினைவுகூருவதாகவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அந்த மக்களின் சந்ததியினர் தலைமுறை தலைமுறையாக சதந்திரத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார்கள். அதேபோன்ற ஒரு மேலாதிக்க ஆட்சியை எதிர்த்தும் அவர்கள் தொடர்ந்து போராடி வருவதாக பாகிஸ்தான் பிரதமர் தனது டுவிட்டரில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Add caption


No comments