உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

இலங்கை ரக்பி சங்கத்திற்கு பாகிஸ்தானிடமிருந்து விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் முஹம்மது சாத் கட்டாக் மற்றும்   இலங்கை ரக்பி சங்கத்தின் தலைவர் லசித குணரத்ன ஆகியோருக்கு இடையில் இன்று (14-07-2020) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு முன்னைய விளையாட்டுத்துறை அமைச்சு வளாகத்தில் இடம்பெற்றது.

பாகிஸ்தான் அரசாங்கத்தின் சார்பாக உயர்ஸ்தானிகர் பாகிஸ்தான் ரக்பி பந்துகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை  இலங்கை ரக்பி சங்கத் தலைவரிடம் கையளித்தார்.

இதற்காக  இலங்கை ரக்பி சங்கத் தலைவர் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் பாகிஸ்தான் மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.

இரண்டு நாடுகளினதும் மக்களது முன்னேற்றத்திற்காக இரு சகோதர நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் இதன்போது வலியுறுத்தினார்.

சிறந்த விளையாட்டு வாய்ப்புகளுடன் இளைய தலைமுறையினரின் தேசத்தைக் கட்டியெழுப்பும் திறனை மேம்படுத்துவதில் இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்க பாகிஸ்தான் எப்போதும் தயாராக உள்ளது  என்றும், இரண்டு நாடுகளும் இந்த  உறவை எதிர்வரும் காலங்களில் தொடர்ந்து வலுவாக முன்னெடுப்பது அவசியம் எனவும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேலும் சுட்டிக்காட்டினார்.

No comments