உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் வாக்களிக்க விசேட தினம் பிரகடனம்

தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களும் வாக்களிப்பதற்காக ஜூலை 31 ஆம் திகதியை விசேட தினமாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட வேண்டும் என பல்வேறு பொது அமைப்புகள் மற்றும் தரப்பினர்களால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் 05 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments