உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

குவெட்டா நூற்றாண்டு பதக்கமளிப்பு விழாவில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கலந்துகொண்டு சிறப்பிப்பு


பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரணையின் கீழ், குவெட்டாவின் கட்டளை  மற்றும் பணியாளர்கள்  கல்லூரியில் பட்டம் பெற்ற 37 இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு நூற்றாண்டு பதக்கம் வழங்குவதற்கான விழா இன்று (22-07-2020) கொழும்பில் நடைபெற்றது.

கொழும்பு படலந்த பகுதியிலுள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் மெரூன் மண்டபத்தில்இந்த விழா கோலாகலமாக நடைபெற்றது.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் ஓய்வுபெற்ற முஹம்மது சாத் கட்டாக், பட்டம் பெற்ற  அதிகாரிகளுக்கும்  மற்றும்  இலங்கையின் பாதுகாப்பு செயலாளர்  மேஜர் ஜெனரல் ஓய்வுபெற்ற கமல் குணரத்னவுக்கும் பதக்கங்களை  வழங்கிவைத்தார்.

பாகிஸ்தான் , குவெட்டாவில் உள்ள கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் 100 கல்வி ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், உரையாற்றிய உயர்ஸ்தானிகர், பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர  நட்புறவுகளை பாராட்டினார்.
அத்துடன் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவத்தற்காக அனைத்து துறைகளிலும் தொடர்ந்து பணியாற்றுவதாக தெரிவித்தார்.

இவ்விழாவில் இலங்கை ஆயுதப் படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும்  இராஜதந்திர சமூகத்தினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments