உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

குருநாகல் புராதன கட்டடத் தகர்ப்பு - இடைக்கால அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு (Photos)

குருநாகலில் புவனேக ஹோட்டல் நடத்திச் செல்லப்பட்ட கட்டடம் தகர்க்கப்பட்டமை தொடர்பான இடைக்கால அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் சற்று முன்னர் கையளிக்கப்பட்டது.

புவனேக ஹோட்டல் நடத்திச் செல்லப்பட்ட தொல்பொருள் பெறுமதிவாய்ந்த கட்டடம் தகர்க்கப்பட்டமை குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழுவின் அறிக்கை இன்று (22-07-2020) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பிரதமர் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கட்டடத்தின் சேதமாக்கப்பட்ட தொல்பொருள் பெறுமதிவாய்ந்த பகுதியை மீளப் புதுப்பித்து பாதுகாப்பதற்கான இயலுமை உள்ளதாகவும், உடனடியாக புராதன கட்டடத்தை மீள் நிர்மாணம் செய்து பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த கட்டடத்தை தொல்பொருள் திணைக்களத்திற்கு பொறுப்பேற்குமாறும், அந்த கட்டடத்தின் அமைவிடத்தை விஸ்தரிக்கும் திட்டத்தை மீளாய்வு செய்யுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அறிவிக்குமாறும் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

இதுதவிர தொல்பொருள் கட்டடத்தை தகர்க்கப்பட்ட சம்பவத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இந்த அழிவிற்குப் பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனம் அல்லது நபர்களிடம் இருந்து புனர்நிர்மானம் செய்வதற்கான செலவை பெற்றுக் கொள்ளுமாறும் நிபுணர் குழு பிரதமரிடம் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.No comments