உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

தேர்தலின் பின் சுகாதார பாதுகாப்புடன் பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவது குறித்து ஆராய்வு (Photos)

பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் கொவிட்-19 சவாலை எதிர்கொண்டு சுகாதாரப் பாதுகாப்புடன் சபை அமர்வுகளை நடத்துவதற்கு தேவையான சுகாதார வழிகாட்டல்களைத் தயாரிப்பது குறித்து ஆராய்வதற்காக சுகாதார அமைச்சு அதிகாரிகள் குழுவொன்று பாராளுமன்றத்திற்கு இன்று (22-07-2020) விஜயம் செய்தது.

சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் லக்‌ஷ்மன் கம்லத் உள்ளிட்ட சுகாதார அமைச்சு அதிகாரிகள் குழுவொன்றே பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்ததாக பாராளுமன்றத் தகவல் பிரிவு குறிப்பிடுகின்றது.

பொதுத் தேர்தலின் பின்னர் பாராளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ள உறுப்பினர்கள், பிரபுக்கள், பாராளுமன்ற பணியாளர்கள், பாதுகாப்புப் பிரிவினர்களை கொவிட்-19 சூழ்நிலையில் இருந்து பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களைத் தயாரிக்கும் நோக்கில் சுகாதார அமைச்சு அதிகாரிகளின் விஜயம் அமைந்திருந்தது.

இந்த வைத்திய அதிகாரிகள் குழு, பாராளுமன்ற சபை மண்டபம், உறுப்பினர்களின் முகப்புக் கூடம், பொது மக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் விசேட விருந்தினர்களுக்கான கலரிகள், உறுப்பினர்களின் உணவுக்கூடம், நூலகம்  என்பவற்றைப் பார்வையிட்டுள்ளனர்.

இதுதவிர பாராளுமன்ற வளாகத்திலுள்ள முக்கிய இடங்களையும் இந்த குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இன்றைய தினம் ஆராயப்பட்ட விடயங்கள் குறித்து சுகாதார அமைச்சு அதிகாரிகளால் எதிர்வரும் நாட்களில் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல் தொகுப்பொன்று பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை, கொவிட் சூழ்நிலை மாற்றமடையும் வரை விசேட விருந்தினர்களை பாராளுமன்றத்திற்கு அனுமதிப்பதை வரையறுப்பது மு்க்கியமாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் முன்வைக்கப்படும் வழிகாட்டல்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளை சுகாதாரப் பாதுகாப்பு முறையின் கீழ் முன்னெடுப்பதற்கு சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க வலியுறுத்தியுள்ளார்.







No comments