உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

இந்திய ஆக்கிரமிப்புக்கு ஒரு வருடம் - ஜம்மு-காஷ்மீர் மக்கள் தொடர்ந்தும் துயரில்: பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கட்டாக் காட்டம்

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்
மேஜர் ஜெனரல் ஓய்வுபெற்ற
முகம்மது சாத் கட்டாக்
ஜம்மு - காஷ்மீர் இந்திய இராணுவத்தின் முற்றுகையின் கீழ் கொண்டுவரப்பட்டு 365 நாட்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், அந்த பிரதேச மக்கள் தொடர்ந்தும் துயரங்களை அனுபவித்து வருவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.

பாதுகாப்பற்ற ஒரு சமூகம் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு, கொலை, தாக்குதல், கற்பழிப்பு என இந்தியாவின் பார்வையின் கீழ் தொடர்வதாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் ஓய்வுபெற்ற முகம்மது சாத் கட்டாக் தெரிவித்துள்ளார்.

மோடி அரசாங்கத்தினால் கடந்த வருடம் ஆகஸ்ட் 05 ஆம் திகதி, ஜெனீவா சாசனங்களுக்கு புறம்பாக தனது அரசியலமைப்பின் 370 மற்றும் 35 ஏ பரிந்துரைகளை ரத்து செய்து, ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை பறித்தெடுத்ததன் மூலம் தனது சொந்த அரசியலமைப்பையே மீறியுள்ளதாக, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த செயற்பாட்டிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை, இஸ்லாமிய நாடுகள் பேரவை உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகள், நாடுகள், நாடுகளின் காங்கிரஸ் சபைகள்,  பாராளுமன்றங்கள் தங்களின் குரல்களை எழுப்பியபோதிலும், அவை இந்திய அரசாங்கத்தின் செயற்பாடுகளை வலுவிழக்கச் செய்யவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவல் காரணமாக உலக நாடுகளின் சுகாதார அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தமது நாட்டில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதையும் புறக்கணித்து பலவீனமடைந்து வரும் தமது சுகாதார கட்டமைப்பை சீர் செய்யாமல், ஆக்கிரமிப்பு மீதான தனது பிடியை இறுக்கிக் கொள்ளும் வாய்ப்பாக சர்வதேச அவசர நிலைமைகளை பயன்படுத்தி காஷ்மீரில் சர்ச்சைக்குரிய சட்டத்தை அமுல்படுத்துவதன் ஊடாக அந்த சமூகத்தை அடக்கி வந்துள்ளதாகவும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்தியாவினால் சட்டவிரோதமாக ஆக்கிரமி்கப்பட்டதாக கூறப்படும் ஜம்மு - காஷ்மீரில், இந்திய இராணுவ முற்றுகை முன்னெடுக்கப்பட்டதன் ஓராண்டு நிறைவடைவதையிட்டு அந்த பிரதேசத்தில் "யவ்ம் - இ - இஸ்திஹ்சால் " நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் பதில் உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹ்மத்தின் பங்குபற்றுதலுடன்  இன்று (03-08-2020) இந்த நிகழ்வு இடம்பெற்றது.



No comments