உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

தேர்தலில் வெற்றியீட்டிய மஹிந்த ராஜபக்ஸவை தமது நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு பாகிஸ்தான் பிரதமர் அழைப்பு

இலங்கைக்கு சகல துறைகளிலும் ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு தயாராகவே இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உறுதியளித்துள்ளார்.


பொதுத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு தொலைபேசி ஊடாக வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.


இதேவேளை, தேர்தலில் வெற்றிபெற்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜக்ஸவின் அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றுவதற்கு விரும்புவதாக தெரிவித்த இம்ரான் கான், கூடிய விரைவில் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


மேலும் பாகிஸ்தான் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கையுடன் சகோதர உணர்வுடன் செயற்படும் ஒரு நாடு என்பதுடன், இலங்கையின் பாதுகாப்பு தொடர்பிலும் அதிக அக்கறை செறுத்தும் ஒரு நாடாகும் என்றும் இதன்போது பாகிஸ்தான் பிரதமர் நினைவு கூர்ந்தார்.


அத்துடன் கொவிட்-19 வைரஸ் பரவல் தொடர்பாக இரண்டு நாடுகளினதும் பிரதமர்கள் தத்தமது நாட்டின் நிலைமை குறித்தும் கருத்துகளைப் பாரிமாற்றிக் கொண்டுள்ளனர்.

No comments