உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

பெய்ரூட் குண்டு வெடிப்பு - காயமடைந்தவர்களால் வைத்தியசாலைகள் நிரம்பி வழிவதாக தகவல் (VIDEO)

லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் இடம்பெற்ற இரண்டு சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகளில் பெருமளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்திருக்கலாம் என அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த குண்டு வெடிப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

குண்டுவெடிப்பினால் பெருமளவு கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் நிரம்பிவழிவதாகவும், பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீளவும் தலைதூக்கிவரும் இந்த தருணத்தில் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளமை லெபனானை மேலும் சிரமத்திற்குள் தள்ளிவிடலாம் எனவும் கூறப்படுகின்றது.

2005 ஆம் ஆண்டு லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரி கார் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக ஐக்கிய நாடுகளின் தீர்ப்பாயத்தினால் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் இந்த குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன.

கார் குண்டுத்தாக்குதலில் ஹரீரி கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு சந்தேகநபர்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்து.

பெய்ரூட்டில் இடம்பெற்ற வெடிப்புகள் தொடர்பான மேலதிக தகவல்கள் காணொளி மூலம்;


Breaking news from Lebanon: The capital Beirut has been hit by a massive explosion. Dozens of people are said to be injured and there are some reports of people trapped under the rubble. The cause of the blast is not yet known. It's caused widespread damage and appears to be centred on the city's port area.



No comments