உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

இலங்கை - பாகிஸ்தான் இடையில் கல்வி ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடல்

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் முஹம்மது சாத் கட்டாக் மற்றும் கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோரிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு கல்வியமைச்சரின் அலுவலகத்தில் இன்று (28/09/2020) நடைபெற்றது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கல்விசார் ஒத்துழைப்புகள் மற்றும் பொதுவான பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வியின் பல்வேறு துறைகளுக்கான ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவதன் அவசியம் குறித்து பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும், இலங்கை கல்வியமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

No comments