கண்டி நகர எல்லைக்குட்பட்ட 45 பாடசாலைகளை உடனடியாக மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாநகரிலும் அதனை அண்மித்துள்ள பகுதிகளிலும் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டு வருவதை அடுத்து மத்திய மாகாண ஆளுநரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைவாக கண்டி நகர எல்லைக்குட்பட்ட 45 பாடசாலைகளை டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை மூடுமாறு ஆளுநர் லலித் யூ. கமகே அறிவித்துள்ளதாக ஆளுநர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

கண்டியில் இன்று (25-11-2020) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 16 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கண்டி மாவட்டத்தில் இதுவரை 320 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

(கண்டி நிருபர்)



Post a Comment

Previous Post Next Post