இந்தியாவின் 500,000 Oxford-AstraZeneca கொவிட் தடுப்பூசிகள் வருகை (Photos)
இந்திய அன்பளிப்பான Oxford-AstraZeneca என்ற கொவிட் தடுப்பூசி மருந்துகளை ஏற்றிய முதலாவது விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது.
கொவிட் தடுப்பூசி மருந்துகளை ஏற்றிய இந்திய விமான சேவைக்கு சொந்தமான AI-281 என்ற விமானம் சற்று நேரத்திற்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.
இலங்கையில் கொவிட்-19 தொற்று பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளுக்கு உதவிபுரியும் நோக்கில் நீண்டகால நெருங்கிய நட்புறவின் பயனாக இந்தியாவினால் இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன,
இந்தியாவினால் வழங்கப்பட்ட 500,000 Oxford-AstraZeneca தடுப்பூசி மருந்துகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரால் இந்த மருந்துகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
#India #SriLanka #Covid-19 #Vaccine #Oxford-AstraZeneca
No comments