September 29, 2022

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  தொடர்பான விசாரணை அறிக்கை மற்றும் தேசிய பாதுகாப்பு துறைசார் மேற்பார்வை செயற்குழு அறிக்கை  ஆகியவற்றை ஆயவு செய்வதற்காக ஜனாதிபதியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு துறைசார் மேற்பார்வை செயற்குழுவின் அறிக்கை ஆகியவற்றின் உள்ளடக்கங்கள் மற்றும் பரிந்துரைகள் குறித்து இந்த குழு விரிவாக ஆராயவுள்ளது.

அதன்பின்னர், மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி அறிக்கையிடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இந்த குழுவை நியமித்துள்ளார்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைவராக அமைச்சர் சமல் ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உதய கம்மன்பில, ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரணதுங்க, ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.