புதிய அலை கலை வட்டத்தின் 2021 க்கான கலை, கலாசார விருதுகள் (Photos)
இந்த பரிசளிப்பு கடந்த சனிக்கிழமை (30.01.2021) கொழும்பு 15 இல் அமைந்துள்ள கிளாரட் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.
கலை, இலக்கிய மற்றும் சமூக சேவைகளை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட புதிய அலைகலை வட்டம் சுமார் 40 வருடகால அனுபவத்தைக் கொண்டது.
எதிர்வரும் காலங்களில் இவ்வாறான பல விடயங்களை முன்னெடுப்பதன் மூலம் புதியவர்களுக்கு வாய்ப்பளித்தல் மற்றும் சமூக சேவையை மேம்படுத்தல் என்பன இடம்பெறுமென அதன் ஸ்தாபகத் தலைவர் ராதா மேத்தா குறிப்பிட்டார்.
அந்த வகையில், நடப்பு வருடத்திற்கான நிர்வாக அங்கத்தவர் தெரிவும் அன்றைய தினம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கலைஞர், ஊடகவியலாளர் ராதாமேத்தா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதற்பரிசை எம். நிரோஷன் இலக்கிய புரவலர் ஹசிம் உமரிடம் இருந்து பெற்றுக் கொள்வதையும் இரண்டாம் பரிசைப்பெற்ற தியத்தலாவை எச் எப்.றிஸ்னா சார்பாக அவரது நண்பி, சமூக சேவையாளர் இம்ரான் நெய்னாரிடம் இருந்து பரிசைப் பெற்றுக் கொள்வதை யும், முன்றாம் பரிசை செல்வி.ஆர்.சுவஸ்திகா பெற்றுக்கொள்வதையும் படங்களில் காணலாம்.
(படங்கள்-ஓவியன்)
No comments