இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CEYPETCO) எரிபொருள்களது புதிய விலைகளை மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன் பிரகாரம் ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 157 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 23 ரூபாவினால் உயர்ந்துள்ளதுடன், புதிய விலை 184 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, டீசலின் விலையும் லீற்றர் ஒன்றுக்கு 7 ரூபா அதிகரித்துள்ளதுடன், புதிய விலை 111 ரூபாவாகும்.
சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 12 ரூபாவினால் அதிகரித்துள்ளதுடன், அதன் புதிய விலை 144 ரூபாவாகும்.
மண்ணெண்ணெய் விலையும் லீற்றர் ஒன்றுக்கு 7 ரூபா அதிகரித்துள்ளதுடன், அதன் புதிய விலை 77 ரூபாவாகும் என மின்சக்தி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.