பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி சந்தேகநபர்கள் 17 பேரின் விடுதலைக்கு கோரிக்கை விடுத்து பெயர்ப்பட்டியல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சிறைக்கூட நெருக்கடியைக் குறைக்கும் செயற்திட்டத்தின் கீழ் தற்போது விடுதலை செய்யக்கூடிய கைதிகள் குறித்து ஆராய்ந்து வருவதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு எவ்வித வழக்கு விசாரணைகளுமின்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு பல்வேறு தரப்புகள் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

