உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவரை மாங்குளம் பகுதியில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்த சந்தேகநபர் உள்ளூர் துப்பாக்கியுடன் நேற்று (05-07-2021) பிற்பகல் நடத்தப்பட்ட தேடுதல்களின்போது ஒலுமடு கோவிலுக்கு அருகே கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாங்குளம் பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை முல்லைத்தீவு நீதிவான் முன்னிலையில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

