September 29, 2022

இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் (16 இலட்சம்) டோஸ் #Sinopharm தடுப்பூசி மருந்துகளை அன்பளிப்பாக வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது.

இது தொடர்பாக சீன அரசாங்கத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சீனாவிற்கான இலங்கைத் தூதரகம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்த தடுப்பூசி மருந்துகளை நாட்டிற்கு அனுப்புவைப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை மற்றும் சீன அரசாங்கத் தரப்புகளுடன் இணைந்து சீனாவிற்கான இலங்கைத் தூதரகம் மேற்கொண்டு வருகின்றது.

அன்பளிப்பாக வழங்கப்படவுள்ள இந்த #Sinopharm தடுப்பூசி மருந்துகள் மூலம் இலங்கையின் கொவிட் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது என இலங்கைத் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.